3,375 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு...
3,375 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து
தேர்வு...வருங்கால முதுகலை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்...நம்பிக்கையுடன்
தேர்வை எதிர்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்..
3,375
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று (2.7.2017) எழுத்து
தேர்வு 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் | 3,375 முதுகலை
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப இன்று (2.7.2017) எழுத்து
தேர்வு நடக்கிறது. 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1,663 முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது.
இதில் கூடுதலாக 1,712 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம் 3,375
பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதற்காக 2 லட்சத்து 18
ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்தனர். எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும்
601 மையங்களில் இன்று (2.7.2017) காலை
10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் 41 மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் பணியாளர்களால் சோதனை செய்யப்படுவார்கள்.
செல்போன், கைக்கணினி, மடிக்கணினி, கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் கடிகாரம்,
கைக்குட்டை ஆகியவை தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்க
மாட்டார்கள். அவர்களது உடைமைகள் பாதுகாப்பாக ஒரு அறையில் வைக்கப்படும்.
தேர்வர்கள் 2 பால்பாயிண்ட் பேனாக்களையும், ஹால்டிக்கெட்டையும் மட்டுமே
கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு மேல்
வந்தால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த தகவல்களை
ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment