'தமிழகத்தில், வீட்டு வேலை செய்வோருக்கு விரைவில், மாத ஊதியம்
நிர்ணயிக்கப்படும்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர், நிலோபர் கபில் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
காங்கிரஸ் - பிரின்ஸ்: கேரளாவில் வீட்டு வேலை செய்வோருக்கு, மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அங்கு, வெளிநாட்டில் வசிப்போரின் நலனுக்காக, வெளிநாடு விவகாரத்துறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், இந்த இரண்டையும் அமல்படுத்த வேண்டும்.
தொழில் துறை அமைச்சர் நிலோபர் கபில்: தமிழகத்தில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஊதியம் நிர்ணயிக்க, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விரைவில், மாத ஊதியத்தை அறிவிக்கும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வழியாக பதிவு செய்து சென்றால், அவர்களுக்கு எந்த பிரச்னையும் நேராமல், அரசு பார்த்துக் கொள்ளும். இவ்வாறு விவாதம் நடந்தது
No comments:
Post a Comment