https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: இன்ஜி., கல்லூரிகளில் யோகா கட்டாயம்

Tuesday, 11 July 2017

இன்ஜி., கல்லூரிகளில் யோகா கட்டாயம்


நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், யோகா
, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.எஸ்., - என்.சி.சி.,

இன்ஜினியரிங் கல்லூரிகளில் முன்பு, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மற்றும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் பழகும் உன்னத் பாரத் அபியான்
போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால், பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை இல்லை. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டின் கீழ் 10 ஆயிரம் இன்ஜி கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ,மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் இனி, யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

No comments:

Post a Comment