https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு: ஆக.,9க்கு ஒத்திவைப்பு

Tuesday, 11 July 2017

நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு: ஆக.,9க்கு ஒத்திவைப்பு


புதுடில்லி:முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு ஆகஸ்ட்
9க்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மாபா.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சட்ட உதவி வழங்குமாறு அட்டர்னி ஜெனரலை சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின், 212வது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் கோர்ட் தலையிடக்கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டார். அவர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

No comments:

Post a Comment