https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: தொலைநிலையில் பி.இ., படிக்க தடை!!!

Tuesday, 11 July 2017

தொலைநிலையில் பி.இ., படிக்க தடை!!!



தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால்
செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்ஜினியரிங், தொழிற்நுட்பம், கட்டடக் கலை, நகர கட்டமைப்பு, பார்மசி, ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழிற்நுட்பம், 'அப்ளைட் ஆர்ட்ஸ்' ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை, தொலைநிலை கல்வியில் படிக்க, அங்கீகாரம் வழங்கப்படவில்லை.எனவே, இந்த படிப்புகளை தொலைநிலையில் படித்து பட்டம் பெற்றால், அது செல்லாது. இதை கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment