https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

Tuesday, 11 July 2017

மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!



ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது

No comments:

Post a Comment