BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION
SENTHIL
Sunday, 24 February 2019
போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதளம் - முதல்வர் தொடங்கிவைத்தார் - தமிழக அரசு தகவல்
( www.tamilnaducareerservices.gov.in )
போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட தகவல்: மாணவர்கள், வேலைதேடுவோருக்கு உயர்கல்வி-வேலைவாய்ப்பு குறித்த தொழில் நெறி வழிகாட்டுதல், உளவியல் ஆய்வின் அடிப்படையில் திறன் அறிதல், தனியார் துறை பணி நியமனத்துக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் போன்ற பல்வேறு வழிமுறைகளின் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன அலுவலக வளாகத்தில் மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் www.tamilnaducareerservices.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளமானது, காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின்னணு புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வுகள் ஆகியவற்றை எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், ஈரோடு, விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் அலுவலர் அலுவலகக் கட்டடங்களையும், அரசு தொழில் பயிற்சி நிலைய கூடுதல் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் நிலோஃபர் கபில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழிலாளர் நலத் துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலிவால், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையாளர் ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்டோர் பங்கேற்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Wednesday, 21 November 2018
விரைவில் போன் அழைப்புகளை ஏற்க கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது இன்கம்மிங் கால்ஸ் எனப்படும் உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும். அதிலும் இந்திய டெலிகாம் துறை ஜியோ வணிகச் சேவை தொடங்கிய பிறகு கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய மாற்றத்தினைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியைச் செய்த நிலையில் இணையதளத் தரவு மிகப் பெரிய அளவில் குறைந்த விலைக்கு அளிக்க வித்திட்டது. அது மட்டும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளித்தது.
வருவாய் இழப்பு மொபைல் போன் பயனர்களுக்குக் குறைந்த விலையில் இணையதளத் தரவு கிடைத்தாலும் டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் அதனால் பெரிய அளவில் பாதிப்படைந்தது.
கிராமப்புற மொபைல் போன் பயனர்கள் மறுபக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் பலர் இதுவரை மொபைல் போனை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது 10 ரூபாய் ரீசார்ஜ் செய்தாலும் பெரியதாக அவர்களிடம் இருந்து வருவாய் ஈட்ட முடியவில்லை. இதனால் தனிநபர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்த வருவாயும் பாதிப்படைந்தது. எனவே அவர்களிடம் இருந்து எப்படி வருவாயினை ஈட்டுவது என்றும் தற்போது டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
உள்வரும் அழைப்புகளுக்குக் கட்டணம் அதன் படி டெலிகாம் நிறுவனங்கள் உள்வரும் அழைப்புகளுக்குக் கட்டணத்தினை வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. ஆம். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் இதனை டெலிகாம் நிறுவனங்கள் கண்டிப்பாகச் செய்யும் என்று கூறப்படுகிறது.
வோடாபோன் மற்றும் ஏர்டெல் வோடாபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட சில முக்கிய டெலிகாம் நிறுவனங்கள் இதற்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன
ஏர்டெல் ரீரார்ஜ் திட்டம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு உள்வரும் அழைப்புகளை இலவசமாகப் பெற முடியும் மற்றும் 26 ரூபாய் டாக் டைம் மற்றும் 100 எம்பி இணையதளத் தரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று ஏர்டெல் நிறுவனம் 35 ரூபாய், 65 ரூபாய் மற்றும் 95 ரூபாய் என மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள் டெலிகாம் நிறுவனங்கள் எப்போது முதல் இந்தத் திட்டங்களை முழுமையாக அமலுக்குக் கொண்டு வரும் என்பது மொபைல் போன் வாடிக்கையாளர்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
மதுரை : திருமங்கலத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழு திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது முகமது ராஜா என்பவருக்கு சொந்தமான கடையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கடைகளில் செய்யப்பட்ட ஆய்வில் கெட்டுப்போன 200 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்தனர்.
"8 டைமண்ட் சீட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா"- ட்விட்டர் கேள்வியால் வெளிப்பட்ட ஆச்சர்யம் !
சீட்டாட்டம் என்பது பல்வேறு எண்களையும், குறியீடுகளையும் கொண்ட கார்டுகளை வைத்து ஆடும் ஒரு விளையாட்டு. ஆட்டத்தின் வகை வேறுபட்டாலும் உலகம் முழுவதிலும் ஒரே விதமான கார்டுகளே இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும். உலகம் முழுக்க பிரபலமான இதை விளையாடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி விளையாடாதவர்கள்கூட சீட்டுகளைப் பார்த்திருப்பார்கள். சீட்டாட்டம் பொழுதுபோக்காகவும், சூதாட்டமாகவும் ஆடப்படுவதுண்டு. ஆனால், இந்தச் சீட்டுகளில் யாருமே கவனித்திருக்காத ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார் ஒருவர். Plink என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து ஒருவர், " 8 டைமண்ட் என்ற சீட்டின் நடுவில் மறைந்துள்ள மற்றொரு 8 - ஐப் பார்த்தபோது உங்களுக்கு என்ன வயது? " என்பதை ஒரு கேள்வியாகப் பதிவுசெய்திருந்தார்.
அதை உன்னிப்பாகக் கவனிக்கும் போதுதான் 8 டைமண்ட் சீட்டின் போட்டோவின் நடுவே மறைந்திருக்கும் 8 என்ற எண் பலரது கண்களுக்கும் புலப்பட்டது. உடனே இந்த விஷயம் ட்விட்டரில் வேகமாகப் பரவியது. அதைப் பார்த்த அனைவருமே இதை முதல் தடவையாகப் பார்க்கிறோம் என்றே பதிலளித்திருக்கிறார்கள். "அட இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாமப் போச்சேப்பானு" ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள். அது சரி இந்த விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ? அல்லது இப்படி ஒன்று இருப்பதை எப்பொழுது தெரிந்து கொண்டீர்கள் என்பதை கமெண்டில் தெரிவிக்கலாமே...
Saturday, 10 November 2018
பள்ளி பாடத் திட்டத்தில் மீண்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு அடுத்த கல்வியாண்டு முதல் 7-ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவரும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலருமான எம்.சங்கிலி தாக்கல் செய்த மனுவிவரம்:
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுபாஷ் சந்திரபோஸþடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடி பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினர் இவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் 1978-1979 ஆண்டு ஆறாம் வகுப்பு பாடத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2018-2019 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் அப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 2019-2020 கல்வியாண்டில் இருந்து ஏழாம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Friday, 9 November 2018
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் கடந்த 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் பதிவினை 24.01.2019 தேதிக்குள் அரசு வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாகவோ, அல்லது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவட்டையின் நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும், 25.01.2019-க்குப் பிறகு புதுப்பித்தல் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தமிழக அரசு அறிவித்துள்ள இச்சலுகையினைப் பெற்று பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவித்துள்ளார்
Subscribe to:
Posts (Atom)