https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: ஜேக்டோ-ஜியோ கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை சார்ந்த கோரிக்கையில்லையென சமூக வலைதளங்களில் ஆசிரியர்கள் கடும் கொந்தளிப்பு !!!

Thursday, 13 July 2017

ஜேக்டோ-ஜியோ கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை சார்ந்த கோரிக்கையில்லையென சமூக வலைதளங்களில் ஆசிரியர்கள் கடும் கொந்தளிப்பு !!!


கடந்த 11/07/2017 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் 63 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கங்களும் ஆசிரிய இயக்கங்களும் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இறுதியாக அனைவருக்கும் பொதுவாக உள்ள பிரச்சினையாக கருதப்படுகின்ற பொதுவான கோரிக்கைகளான
*7 வது ஊதியக்குழுவை அமுல்படுத்துவது.


*பழைய ஓய்வூதிய திட்டம் திட்டத்தை அமுல்படுத்துவது*

*ஊதியக்குழு அமுல்படுத்த காலதாமதம் ஏற்படின் 20% இடைக்கால நிவாரணம் வழங்குதல்*
போன்ற கோரிக்கைகளை மட்டும் பொதுவான கோரிக்கைகளாக வைக்கப்பட்டன.

கடந்த 6வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தது
ஆனால் 2006 ல் நடைமுறைப்படுத்த வேண்டிய  ஊதியக்குழுவை 2009 ல்  நடைமுறை படுத்தியது மட்டுமல்லாமல் அதன் நிலுவைத்தொகையினை 2007 லிருந்து வழங்கியது. (2006 ல் வழங்கவேண்டிய ஒரு வருட  தொகையினை நமக்கு வழங்கவில்லை)

அதுபோல இந்த ஊதியக்குழுவை நடைமுறை படுத்த இன்னும் காலதாமதம் ஏற்பட்டு நிலுவைத்தொகையினை முந்தைய ஊதியக்குழுவில் செய்தது போல்                 7 வது ஊதியக்குழுவிலும் (ஓரிரு வருடங்களுக்கு)
 கருத்தியலாக எடுத்துகொண்டால் ஒவ்வொரு நபருக்கும் ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை இழப்பு ஏற்படலாம் என்பதற்காகவே பொதுவான கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராட முடிவெடுத்துள்ளது.


🤔🤔63 க்கும் மேற்பட்ட சங்கங்களிலிருந்து ஒவ்வொரு அமைப்பும்  தனித்தனியாக அவரவர் சங்கத்திற்கு சாதகமாக வலியுறுத்திய கோரிக்கைகளை , போராட்ட கோரிக்கைகளாக வைத்திருந்தால் கோரிக்கைகளும் 100 ஆகிவிடும்.                     ஒரு கோரிக்கையும் நிறைவேறாமல் கானல்நீராக நீர்த்துப்போய்விடும். ஆகவே தான் கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அனைவருக்கும் பொதுவான கோரிக்கைகளை மட்டும் எடுத்துள்ளனர் என்பதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும்...
 

😡😡😡😡😡                            *2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட குழுவின் ஒற்றை கோரிக்கைகான தனித்த போராட்டம் விரைவில்*


🌹*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டி பல்வேறு போராட்டங்களை *SSTA*  தொடர்ந்து செய்துவரும் வேளையில் ,          


*யார் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை கைவிட்டாலும் , SSTA உயிர் துறக்கும் நிலை வந்தாலும் கோரிக்கை வென்றெடுக்கும் வரை  கைவிடாது*          


 நமது பாதிப்பினை முழுமையாக நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களை களத்தில் கொண்டு வர  *வலிமையான கட்டமைப்பை உருவாக்கிடுதல் வேண்டும்.*

*பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நாம் இதுவரை இழந்த 6 இலட்சம் பற்றியும் , ஊதியமுரண்பாட்டை சரிசெய்யாவிட்டால் அழியப்போகும் நம் இடைநிலை ஆசிரியர் இனம் பற்றியும்  ,மற்ற அனைத்து மாநிலத்திலேயும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பான ஊதியம் வழங்கி வரும் நிலையில்*,


*இந்தியாவிலேயே நிரந்தர  ஆசிரியர்களுக்கு அதுவும் தகுதித்தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மத்திய அரசின்  துப்புரவு பணியாளர்களுக்கு  வழங்கும் ஊதியத்தை (5200) கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதை ஆதாரங்களுடன் ஆசிரியர்களுக்கு தெரியவைத்து ஒட்டுமொத்தமாக ஒருவரையும் விடாமல் போராட்டகளம் கண்டால் வெற்றி என்பது 100% உறுதியாகும்*...                
இனிஒரு போராட்டம் அல்லது கவன ஈர்ப்பு என நாம் ஆரம்பித்தால் அரசு நமது முழு பலத்தையும் அறியும் வண்ணம் போராட்டத்தின் தீவிரம் இருக்க வேண்டும்...



அதற்கு நமது  *கட்டமைப்பை வலிமையாக்கி  அதிகமான பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு களம் சென்றால் மட்டுமே நமது கோரிக்கையை தயக்கமின்றி வென்றெடுக்க* முடியும்....


*நமது கோரிக்கையான மாநில அரசுக்கு இணையான ஊதியம் குறித்த போராட்ட அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்*...

 போராட்ட குழுவின் கட்டமைப்பை பலப்படுத்த,
அனைத்து *2009 & TET இடைநிலை ஆசிரியர்களையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைக்க திட்டங்கள் ஒரிரு நாட்களில்* அறிவிக்கப்படும்.

*பாதிக்கப்பட்ட ஒருவரையும் விடாமல் போராட்டத்தில் பங்கெடுக்க வைப்பதே நமது தற்போதைய இலக்கு*்...

*கோரிக்கையை வென்றெடுக்க கோடி கைகள் போராடும்*💪🏼💪🏼💪🏼💪🏼

இவண் -
*2009 & TET போராட்ட குழு மாநில தலைமை*🌹🌹🌹

No comments:

Post a Comment