https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்!!

Tuesday, 11 July 2017

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்!!



அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்திருக்கும் இம்மாபெரும் வரலாற்றை
நாங்கள் மெய்சிலிர்ப்போடு பார்க்கிறோம் மிக நம்பிக்கையாக உணர்கிறோம். அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ- வை நோக்கி திரும்பி இருக்கிறது.

அரசு இதையும் அலட்சியம் காட்டினால் தமிழ்நாட்டின் அரசு அலுவல்கள் ஒட்டுமொத்தமாய் முடங்கிப்போய் தமிழ்நாடே அல்லோலகல்லோலப் படவிருக்கிறது இதுவெல்லாம் ஜாக்டோ ஜியோ- வின் கடந்த கால சாதனைகளை வைத்து நிச்சயம் நடக்கும் என நம்பலாம். இம்மாபெரும் அமைப்பான ஜாக்டோ ஜியோ முத்தாய்ப்பான மூன்று கோரிக்கைகளை முன் வைக்கிறது

1) பழைய பென்ஷனை அமல்படுத்த வேண்டும்

2) உடனடியாக ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது
( தமிழ்கத்தில் எட்டாவது)

3) 20 சதவீதம் இடைக்கால நிவாரணம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளாக கருதி இம்மூன்று கோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து முன் வைத்திருக்கிறது.

இந்த முத்தாய்ப்பு கோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை  ஜாக்டோ ஜியோவிற்கு ஆசிரியர்கள் சார்பாக வைக்கிறோம்.

இன்னுமொரு கோரிக்கையை மிக  சங்கடத்தோடு  மன்றாடி கெஞ்சி ஜாக்டோ ஜியோவிடம் கேட்கிறோம்.

இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால் தயவுசெய்து

*இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக புலம்பிக் கொண்டிருக்கும் ஒரே கோரிக்கையான ஊதிய முரண்பாடு கலைதல்* ( 2009 பிறகான இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு) என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..

 ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..


*நம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் இடைநிலை ஆசிரியர்கள்*

No comments:

Post a Comment