15 செலிபிரிட்டிகள்,
பல கோடி ரூபாய் பட்ஜெட் என முதல்முறையாக எக்கச்சக்க விஷயங்களோடு தமிழில்
வந்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஷோவைப் பற்றி பல சர்ச்சைகள். இதைப் பற்றி மக்கள்
என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள, விகடன் இணையதளத்தில் சர்வே
எடுத்தோம்.
‘இது, உளவியல் சார்ந்த ஒரு நிகழ்ச்சி எனக் கருதுகிறீர்களா?', `உள்ளே
இருப்பவர்களில் யாருடைய நடவடிக்கைகள் உங்களைக் கவர்கின்றன?'
`பங்கேற்பாளர்களில் எரிச்சலூட்டும்விதமாக நடந்துகொள்பவர் யார்?' போன்ற
ஒன்பது கேள்விகளுக்கு மக்கள் தேர்ந்தெடுத்த சாய்ஸ் அனைத்துமே ஆச்சர்ய
ட்விஸ்ட்.
மொத்தம் 6,610 பேர் இந்த சர்வேயில் பங்கெடுத்தனர். சிலர் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டார்கள்
.
`இந்தப் போட்டி, அனைவருக்குமான ஒரு வாழ்வியல் தத்துவம். மனிதன், தன்னைக்
காத்துக்கொள்ளவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் எதுவும் செய்வான். அதற்கான
நிகழ்ச்சிதான் இது' எனப் பலர் தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் ` இந்த
நிகழ்ச்சி, மெகா சீரியலைவிட மோசமாக எரிச்சலூட்டுகிறது' என விமர்சித்தனர்.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது
என்பதை உணர முடிகிறது.
`அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பது' என்ற முதல் கேள்விக்கு
4,365 பேர் (66%) `தவறு' எனச் சொன்னாலும், 2,056 பேர் (31.1%) `தவறுதான்.
ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறதே' என்ற ஆப்ஷனை க்ளிக்கியுள்ளனர். 189 (2.9%)
பேர் மட்டும் `இது சரி' என்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கு கமல் சொன்ன பதிலை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றே
தெரிகிறது. 34.8 சதவீதம் பேர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்,
50.3 சதவீதம் பேர் `ஏற்றுக்கொள்கிறேன்' என்கிறார்கள். 14.9 சதவீதத்தினர்
`இதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை' எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
`கமல், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போகிறார்'
என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது. முதல் எபிசோடில் `கமலின் பெர்ஃபாமன்ஸ்
செயற்கையாக இருக்கிறது' எனப் பலர் சொன்னாலும், அடுத்தடுத்த வாரங்களில்
இயல்பாகப் பேசி லைக்ஸ் வாங்கினார். இவரின் பெர்ஃபாமன்ஸ்
`சூப்பர்' என 2,858 பேர் (43.3%) ஆதரவு தெரிவித்தாலும், 2,877 பேர் (43.5%) `சுமார்' என்கிறார்கள். கமல் மேல் என்ன கோபமோ தெரியவில்லை 875 பேர் (13.2%) மட்டும் `மோசம்' என வாக்களித்துள்ளனர்.
`இந்த நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட் எதுவும் இல்லை' என கமல்
ஆரம்பத்திலிருந்து சொல்லிவந்தாலும், மக்கள் இதை ஸ்க்ரிப்ட் என்றே
எண்ணுகிறார்கள். சரி பாதி விகிதத்தினர், அதாவது 3,462 பேர் (52.4%) `இது
ஸ்க்ரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி' என எண்ணுகிறார்கள். `குழப்பமாக
இருக்கிறது' என 2,011 பேரும் (30.4%), `இல்லை' என 1,137 பேரும் (17.2%)
தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி, ஓர் உளவியல் சார்ந்த நிகழ்ச்சிதான் என மக்கள்
நம்புகிறார்கள். 3,501 பேர் (52.9%) `ஆம்' எனவும், 2,103 பேர் (31.8%)
`இல்லை' எனவும், 1,006 பேர் (15.2%) `தெரியவில்லை' எனவும் பதில்
சொல்லியிருக்கிறார்கள்.
பங்கேற்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்க் பற்றி 3,349 பேர் (50.6%)
`ஏரிச்சலூட்டுகிறது' என்றுதான் பதில் பதிவிட்டிருக்கிறார்கள். `அதைப்
பற்றியெல்லாம் சொல்ல ஒன்றுமில்லை' என 2,109 பேர் (31.9%) சொன்னாலும்,
1,152 பேர் (17.4%) மட்டுமே `ஜாலியாக இருக்கிறது' என்கிறார்கள்.
அமோகமாக ஓட்டு வாங்கி மக்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியாதான். 2,649 பேர்
(40.1%) ஓவியாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். 1,867 பேர் (28.2%) கணேஷ்
வெங்கட்ராமுக்கும், 367 பேர் (5.6%) ஆரவ்வுக்கும்
வாக்களித்திருக்கிறார்கள். நமீதாவுக்கு 352 பேர் (5.3%), ஜூலியானாவுக்கு
342 பேர் (5.2%), பரணிக்கு 311 பேர் (4.5%), ஷக்திக்கு 197 பேர் (3%),
ரைசாவுக்கு 182 பேர் (2.8%), வையாபுரிக்கு 124 பேர் (1.9%), சினேகனுக்கு 99
பேர் (1.5%), காயத்ரி ரகுராமுக்கு 63 பேர் (1%), இறுதியாக ஆர்த்திக்கு
வெறும் 57 நபர்கள் (0.9%) மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். பரணி தற்போது
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாலும் `Wild card' - என்டரி மூலம்
திரும்பி வருவார் என்றே சொல்லப்படுகிறது.

3,252 பேர் (49.2%) ஆர்த்திக்கு வாக்களித்து முதல் இடம்
வழங்கியிருக்கிறார்கள். 1,753 பேர் (26.5%) காயத்ரிக்கு வாக்களித்து
இரண்டாம் இடமும், 869 பேர் (13.2%) ஜூலியானாவுக்கு வாக்களித்து மூன்றாம்
இடம் கொடுத்திருக்கிறார்கள். சினேகனுக்கு 398 பேரும் (6%), ஓவியாவுக்கு 123
பேரும் (1.9%), பரணிக்கு 63 பேரும் (1%), நமீதாவுக்கு 48 பேரும் (0.7%),
வையாபுரிக்கு 29 பேரும் (0.4%), ஷக்திக்கு 27 பேரும் (0.4%), கணேஷ்
வெங்கட்ராமுக்கு 19 பேரும் (0.3%), ரைசாவுக்கு 17 பேரும், ஆரவுக்கு 12
பேரும் வாக்களித்திருக்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கு 2,930 பேர் (44.3%) `பார்க்கவே முடியலை, இதில்
பங்கேற்பதா?' என தங்கள் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள். `தில்லாகச்
செல்வேன்' என 2,299 பேரும் (34.8%), `ஆள விடுங்கப்பா... பார்ப்பதோடு சரி'
என 1,381 பேரும் (20.9%) வாக்களித்திருக்கிறார்கள்.