https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: JACTTO-GEO' போராட்டம் முடிவுக்கு வருகிறது

Friday, 8 September 2017

JACTTO-GEO' போராட்டம் முடிவுக்கு வருகிறது

 

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
'செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்திய பின், ஒரு தரப்பினர் பின்வாங்கினர். இன்னொரு தரப்பினர் மட்டும், இரு நாட்களாக வேலைநிறுத்தம், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், வேலைநிறுத்தத்தை தொடரக் கூடாது என, மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்தது. ஆனாலும் நேற்று, வேலைநிறுத்த போராட்டம் தீவிரமானது. பின்வாங்கிய சங்கத்தினரும், நேற்றைய போராட்டங்களில் பங்கேற்றனர். அதனால், ௫௦ சதவீத அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. அரசு பணிகள் பாதிக்கப்பட்டன; பள்ளிகள் முடங்கின.
நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில், இன்றுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ள, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், சென்னையில், இன்று பிற்பகலில் கூடி முடிவு எடுக்கின்றனர்.
முதல்வரின் வாக்குறுதிப்படி, நவ., 30௦க்குள், ஊதிய உயர்வு வழங்கப்படாவிட்டால், மீண்டும் அக்டோபரில் போராட்டத்தில் குதிக்க, முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment