https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: அசாம் அரசு அதிரடி : 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை !!

Tuesday, 19 September 2017

அசாம் அரசு அதிரடி : 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை !!


 இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலையோ உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ இனி இல்லை என்ற அதிரடி திட்டத்தை அசாம் அரசு கொண்டுவந்துள்ளது. அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது. எம்.எல்.ஏ.வாக தேர்வு
செய்யப்பட்டவர்கள் இந்த விதியை மீறினால் தகுதி இழப்புக்கு ஆளாவார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் 2 குழந்தைகள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது. 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2 கோடியே 66 லட்சமாக இருந்த அசாமின் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த 17 சதவீத வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாது என்பதால் மக்கள் தொகை கொள்கையை திருத்தி அமைத்துள்ளதாக அசாத் அரசு விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment