https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி குறைந்தபட்ச பென்ஷன் கூட இல்லாத அவல நிலை..(CPS ) புதிய பென்ஷன் திட்டத்தின் கோர முகம் !!

Tuesday, 12 September 2017

அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி குறைந்தபட்ச பென்ஷன் கூட இல்லாத அவல நிலை..(CPS ) புதிய பென்ஷன் திட்டத்தின் கோர முகம் !!


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறார்.
திண்டுக்கல், சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர். 10ம் வகுப்பு வரை
படித்த இவர், தையல் தொழில் பயிற்சி
முடித்துள்ளார். 1982, ஜூலை, 1ல், குஜிலியம்பாறை ஒன்றியம், சின்னழகு நாயக்கனூரில், அங்கன்வாடி பணியாளராக சேர்ந்தார்.கடந்த, 2004ல், நத்தம் சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தையல் ஆசிரியராகவும், 2007 முதல், கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியிலும் பணிபுரிந்த இவர், 2011 பிப்., 28ல், ஓய்வு பெற்றார்.புதிய பென்ஷன் திட்டத்திற்காக, இவரது சம்பளத்தில் மாதந்தோறும், பணம் பிடித்தம் செய்யப்பட்டது. பணி ஓய்வு பெற்ற இவருக்கு, இரு ஆண்டுகளாகியும், இதுவரை பென்ஷன் வரவில்லை.பென்ஷன் தாமதம் மற்றும் தன்னிடம் பிடித்த தொகையையும் திருப்பி வழங்காததால், பணமின்றி சிரமப்பட்ட எலிசபெத், நூறு நாள் வேலை திட்டத்தில் மண் சுமக்கும் வேலை செய்கிறார்.எலிசபெத் கூறியதாவது:


பென்ஷன் கேட்டு, மாநில முதன்மை கணக்காயருக்கு தபால் அனுப்பப்பட்டது. புதிய பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், அரசு முடிவு எடுக்காததால், தபால் திருப்பி அனுப்பப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்துள்ளேன்.தீர்ப்பு வரும் வரை, சாப்பிடாமல் இருக்க முடியாது அல்லவா? இதனால் மாரம்பாடி ஊராட்சியில், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் கூலியால், சாப்பாட்டு பிரச்னை தீர்ந்துள்ளது. பென்ஷன் கிடைத்தாலும், இப்பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்.ஆசிரியராக இருந்த நான், கூலி வேலைக்கு செல்வதால் எந்த சங்கடமும் இல்லை. மன திருப்தியுடன் ஆத்மார்த்தமாக பணி செய்கிறேன். இருந்த போதும், என்னிடம் பிடித்தம் செய்த தொகையை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment