https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: 2017

Friday, 29 September 2017

7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு


ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!




ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.   
ஆண்டுதோறும் ஊதியம், ஆண்டுக்கு இருமுறை உயரும் அகவிலைப்படியால்  ஊதியமானது அதிகரித்துக்கொண்டு போகும் என்றாலும் ‘ஊதிய மேம்பாடு’ தருவது ஊதியக்குழு பரிந்துரையால்தான். ஏனென்றால், ஓர் ஊதியக் குழுவுக்கும், அதற்கடுத்த ஊதியக் குழுவுக்குமான பத்தாண்டு கால இடைவெளியில் தரப்படும் அகவிலைப்படி மொத்தத்தையும் அடிப்படை ஊதியமாக (Basic Pay) அங்கீகரித்துத் தருவது ஊதியக்குழுதான். இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஊதியத்தைத்தான் ‘உண்மை ஊதியம்’ (Real Pay) என்று குறிப்பிடுகிறது ஏழாவது ஊதியக்குழு. இதற்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு தரவே அகவிலைப்படி உயர்வு அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.
நான்கு அம்சங்கள் 
அரசு இயந்திரம் சிறப்பாகச் செயல்பட ஊழியர்களின் ‘திருப்தி’ அவசியம் என்பதால், ஏழாவது ஊதியக்குழு கீழ்க்காணும் நான்கு முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு தனது ஊதிய நிர்ணய பரிந்துரையை அளித்துள்ளது. 
1. ஊதியமானது, திறன்மிகுந்த ஊழியர்களை ஈர்த்து, தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ளும் வகையில் போதுமான அளவு இருக்க வேண்டும்.
2. ‘கடுமையாக உழைக்க வேண்டும்’ என்ற உந்துதலை ஊழியரிடையே ஏற்படுத்தக்கூடியதாக  இருக்க வேண்டும்.
3. ஊதியக் கொள்கையானது (Pay Policy) இதர மனிதவள மேலாண்மைச் சீர்திருத்தங்களுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.
4. அமைக்கப்படும் ஊதிய நிலைகள், நாட்டின் நிதிநிலை ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
இதன்படி, புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு  இருக்கும்... 1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும், தர ஊதியமும் சேர்ந்தது 100%. அன்றைய தேதியில் தரப்பட்டிருந்த அகவிலைப் படி 125%.  ஊதியம் + அகவிலைப் படியின் கூட்டுத் தொகை 225%. ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரையில் 14.2 சதவிகித உயர்வை வழங்கியுள்ளது. அதன்படி, 225 சதவிகிதத்தில் 14.2% உயர்வு என்பது 32% ஆகும். அப்படியானால் 100+125+32 = 257%. இதுதான் அனைவருக்கும் பொதுவான ஊதிய நிர்ணயமுறை.
இந்த 257 சதவிகிதம்தான் 2.57 மடங்கு எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, 1.1.2016 அன்று பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி, பெருக்கி வரும் தொகையை ரூ.100-ன் மடங்குகளில் அமைத்து, ஊதிய நிர்ணய அட்டவணை ஒன்று அமைந்துள்ளது. இதன்படி நிர்ணயம் செய்யப்படுவதே ‘உண்மை ஊதியம்’ என்று சொல்லப்படும் அடிப்படை ஊதியமாக இருக்கும். 1.1.2016-க்குப் பிறகு தர ஊதியம் கிடையாது.
இவ்வாறு புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்தபிறகு, பணியில் உள்ள ஊழியர்களுக்கு 1.1.2016-க்குப் பிறகு கிடைக்கும் சில பணிப் பலன்கள் பின்வருமாறு இருக்கும்.
ஊதிய உயர்வு 
வருடத்துக்கு ஒருமுறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதிய உயர்வானது, 1.1.2016-க்கு முன்பு இருந்த ஊதியம் + தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் மூன்று சதவிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.10-ன் மடங்குகளில் இருந்தது. 
01.01.2016-ல் தர ஊதியமானது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதால்,      1.1.2016-க்குப் பிறகு தரப்படும் ஊதிய உயர்வானது அடிப்படை ஊதியத்தில் மூன்று சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.100-ன் மடங்குகளாக இருக்கும். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.22,850 அடிப்படை ஊதியமும் ரூ.5,400 தர ஊதியமும் பெற்றிருந்த ஒரு சிறப்பு நிலை செவிலியருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வு தொகையாக ரூ.850 தரப்பட்டிருக்கும். அதாவது, 22,850+5,400 = 28,250. இதற்கான மூன்று சதவிகித உயர்வு ரூ.850.
இந்தச் சிறப்பு நிலை, செவிலியரின் மொத்த ஊதியமான ரூ.28,250-க்கு நிர்ணயம் செய்யப்படும் புதிய ஊதியம்,  ஊதிய நிர்ணய அட்டவணைப்படி (Pay Matrix) ரூ.73,200-ஆக இருக்கும். எனவே, இவரது வருடாந்திர ஊதிய உயர்வு ரூ.2,200-ல் துவங்கி ரூ.2,300, ரூ.2,400 என ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகும்.
அகவிலைப்படி உயர்வு 
31.12.2015 அன்று ரூ.32,400 அடிப்படை ஊதியமும் ரூ.7,600 தர ஊதியமும் பெற்றிருந்த ஓர் அலுவலருக்கு ரூ.40,000-க்கு அகவிலைப் படி கணக்கிடப் பட்டிருக்கும். (32,400+7,600 = 40,000) இவரது புதிய ஊதியம் ரூ.1,02,800-ஆக நிர்ணயம் செய்யப்படும். ஆகையால், இனி இவரது அகவிலைப்படி ரூ.1,02,800-க்குக் கணக்கிடப் படும்.
ஊதிய முன்பணம் 
அரசு ஊழியர், ஆசிரியர் முதலானோர் பணிமாறுதல் (Transfer) செய்யப்படும்போது ஒரு மாத அடிப்படை ஊதியத்தை முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதனை மூன்று சம தவணை களில் மூன்று மாதங்களில் திரும்பச் செலுத்தலாம். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.20,900 அடிப்படை ஊதியம் +
ரூ4
,800 தர ஊதியம் பெற்றிருந்த ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கக்கூடிய முன்பணம் ரூ.25,700-ஆக இருந்திருக்கும். புதிய ஊதிய நிர்ணயத்தின்படி, இவரது அடிப்படை ஊதியம் ரூ.68,000-ஆக உயரும் என்பதால், இவர் ரூ.68,000-யை வட்டி இல்லாத முன்பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். (இந்த ஊதிய முன்பணமானது சொந்த விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கே சென்றாலும் கிடைக்கும்.) மேற்கண்டவை அனைத்தும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவுள்ள, புதிய அடிப்படை ஊதியம் வழங்கவுள்ள மேம்பட்ட பணிப்பலன்களே.
இனி, உண்மை ஊதியமான அடிப்படை ஊதியம் புதிய பணியாளர்களுக்கு எப்படி மேம்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். 
புதிய ஊழியர்கள்
புதிதாகப் பணிக்கு வருவோர்க்கான தொடக்கநிலை ஊதியம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 01.01.2016-க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேருபவருக்குத் தரப்பட்ட ஊதியம் + தர ஊதியம் + 125% அகவிலைப் படி= 9,300+4,600+17,375 = ரூ.31,275 இது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கத்துக்கு முந்தைய நிலை. ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தபின் பட்டதாரி ஆசிரியர் பெறக் கூடிய ஊதியம், 01.01.2016 அன்று, ரூ.44,900. அதாவது, தொடக்க நிலை அடிப்படை ஊதியம் ரூ.44900, முந்தைய ஊதியமான ரூ.31,275-யைவிட 43.56% அதிகம். 
இந்த 43.56% அடிப்படை ஊதிய உயர்வு என்பது பட்டதாரி ஆசிரியருக்கு மட்டு மன்றி, ரூ.9,300-34,800 என்ற ஊதிய ஏற்றமுறையும் ரூ.4,600 தர ஊதியமும் கொண்ட பழைய ஊதிய நிலைக்கு இணை யாகத் தற்போது மேம்படுத்தப் பட்டுள்ள புதிய ஊதிய நிலையில், நேரடி நியமனம் பெறும் அனைத்துப் பதவிகளுக்கும் பொருந்தும். இன்ன பதவிக்குத்தான் மேம்படுத்தப் பட்ட தொடக்க நிலை ஊதியம் என்றில்லாமல், நேரடி நியமனம் பெறத்தக்க அனைத்து பதவிகளுக்குமே அடிப்படை ஊதியத்தில் 62.22% வரை அதிகரித்த ஊதியத்தைத் தந்துள்ளது (Pay Matrix) ஊதிய நிர்ணய அட்டவணை.
‘மூத்த ஊழியரின் ஊதியம், அதே பதவியில் உள்ள இளைய ஊழியரின் ஊதியத்தைவிட குறைவாக இருக்கக்கூடாது’ என்பது விதிமுறை. இந்த விதிமுறையைப் பயன்படுத்தி சில வருடங்கள் முன்னதாகவே பணிக்கு வந்து, புதிய ஊதியத்தில் குறைவான ஊதியம் பெறுவோர், தமது இளையவரின் ஊதியத்துக்கு இணையாக ஊதியம் பெற முடியும். இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தொடக்கநிலை ஊதியத்தின் பலன், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு வந்த ஊழியர்களுக்கும் போய்ச் சேரும்.
சுருக்கமாகச் சொல்வதானால், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் சிறப்பம்சமே தொடக்க நிலை ஊதிய மேம்பாடுதான். இந்த மேம்பாடானது, தற்போது பணியில் சேரும் ஊழியர்களுக்கு, கால ஓட்டத்தில் நிறைவான பணப்பலனை வழங்கக்கூடும்.  ஊதிய ஏற்றம் கருதி தனியார் துறைக்குச் செல்ல விரும்பும் திறன்மிகு இளைஞர்களை அரசுப் பணிக்குக் கொண்டு வந்துசேர்க்கும்!  

MEENAKSHI UNIVERSITY M.PHIL EQUAL TO MADRAS UNIVERSITY M.PHIL-ORDER




Seventh Pay Commission - Arrear Calculation For all Pay Bands - Full Details

01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் 7 வது ஊதியக்குழுவில் பெறும் புதிய ஊதியம் எவ்வளவு ?

அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!!  7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016.   7வது ஊதியக்குழுவில் அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6890+750
தர ஊதியம் : 2800
மொத்தம் : 10,440
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of  10440 x  2.57 = 26,831
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 26,831 
அகவிலைப்படி : இல்லை
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.
ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 8%, 16%, 24% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)
மருத்துவப்படி : 200
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 28,111
*********************************
6 வது ஊதியக்குழு  முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6890
தர ஊதியம் : 2800 +750
மொத்தம் : 10440
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி.       125% : 13050
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 24130
********************
வித்தியாசம் :3981
********************
தோராய ஊதிய உயர்வு : 14%.

புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும்,39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்புகிடைக்கும்என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
மிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம்அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல்பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்குஅமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்விதமுன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது.
கணினி கல்வி முடித்த பட்டதாரிகள்பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும்,1999ல்,மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம்இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த,1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்தகணினி பட்டதாரிகள் போராடியதால், பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்கு,போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 
இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து,பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின், கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்ப,எவ்வித அறிவிப்பும் இல்லை.கடந்த 2006க்கு பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தரம்உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை.
கணினி அறிவியல் பாடத்தை, கல்லுாரிகளில் முக்கிய பாடப்பிரிவாக தேர்வு செய்துபடித்து, பி.எட் முடித்து, வேலையில்லாமல், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்க, அரசு எவ்விதமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.
 மத்திய அரசு கொண்டுவந்த, புதிய பாடத்திட்டம்அமலானால், படித்து வேலையில்லாமல் காத்திருக்கும், கணினி பட்டதாரிகளுக்கு, பணிவாய்ப்பு கிடைக்கும் என, கணினி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடுபி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் குமரேசன்கூறுகையில், ''பள்ளிகளில் அலுவலகம் சார் பணிகளுக்கு கூட, பி.எட்., முடித்தகணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.தற்போது பொறியியல்மாணவர்களும், பி.எட்., படிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பதுஅதிர்ச்சியளிக்கிறது. புதிய பாடத்திட்டம் அமலானால், கூடுமானவரை கணினிஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். பள்ளிகளில் 3ம் வகுப்பிலிருந்து கணினிகல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறோம்,'' என்றார்.

Thursday, 21 September 2017

நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

நாட்டில் முதல் முறையாக ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகள் 40 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். 
மேலும் வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் தேசிய அளவில் பொதுத்தேர்வை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


Flash News : அரசு ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிக்க 5 மாதம் தேவை - உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய அரசு (UPDATED NEWS)

அரசு ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிக்க 5 மாதம் தேவை
உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய அரசு
அனைத்துதுறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன- அரசு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அரசின் அலட்சியத்தால் 7 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு என முறையீடு

அரசு ஊழியர் கோரிக்கை தொடர்பாக செப்.30க்குள் அறிக்கை தாக்கல்- தமிழக அரசு

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார்.
கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
எனினும் அரசுஊழியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு காட்டியது. மேலும் உடனடியாக பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயணா நீதிமன்றத்தில் கூறியதாவது:
 
அரசு பரிசீலிக்கிறது

அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன.

செப்.30க்குள் அறிக்கை
இது நிதி சார்ந்த விஷயம் என்பதால் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விஜய் நாராயணா கூறினார்.
 
இடைக்கால உத்தரவு
அப்போது, அறிக்கை தாக்கல் செய்து 2 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிடில் 20 சதவீத நிவாரணம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்த அரசு ஊழியர்கள் இந்த மாத இறுதி வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்.
 
5 மாத அவகாசம்

இதனிடயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 5 மாத கால அவகாசம் கோரியது தமிழக அரசு.

Flash News:அறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் 20% இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள் என்று அரசு ஊழியர், அசிரியர்களுக்கு நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். 
அறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் 20% இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேகே,சசிதரன், சுவாமிநாதன் அமர்வு உறுதியளித்துள்ளது.

#BREAKING வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்;உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது .
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663 முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் .
ஆசிரியர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின் 1712 இடங்கள் மேலும் சேர்க்கப்பட்டு மொத்தம் நிரப்படும் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3375 ஆக கொண்டு வந்தது . இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்து பங்கேற்ற தேர்வானது மிக கடினமான போட்டி களமாக இருந்தது . ஜூலை 1 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது . தேர்வுக்கான முடிவு ஆகஸ்ட் 11 ஆம் நாள் வெளியிடப்பட்டது .41 நாளுக்குள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது,   எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29 சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது .
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் முறைப்படி சரிப்பார்க்கப்பட்டு , சீனியர், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு போன்ற பல்வேறு வெயிட்டேஜ் மதிபெண்களை கவனித்து அவர்களுக்கான மதிபெண்கள் ஒதுக்கீடு செய்து கடந்த 12 ஆம் நாள் பணிநியமனத்தில் நியமிக்கப்படுவோர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது .
இதற்கிடையில் 2315 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் தேர்வு பெற்றனர் எனபதால் மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தயராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மீதமுள்ள 1065 காலி பணியிடங்களுக்கான நியமனம் செய்ய கேட்டுகொண்டால் அதற்க்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார் ஆசிரிய தேர்வு வாரிய தலைவர் .
உண்மையில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் வேகம் மற்றும் தேர்வு நடத்தும் நாள் அத்துடன் விடைகள், கவுன்சிலிங் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடப்பதாக தேர்வர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்

JACTTO - GEO நீதிமன்ற உத்தரவு - முழு விவரம்

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.
2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
 இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது

4. வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது


5. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்
6 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

Wednesday, 20 September 2017

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று துவக்கம் : வதந்தி பரப்பினால் நடவடிக்கை


தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று முதல் (செப்.20) வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. 
இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான்.இந்த வைரசை மழைக் காலத்தில் போலியோ சொட்டு மருந்துபோலஒரேநேரத்தில் வழங்கினால் அழிக்க முடியும். இதனால் ரோட்டாவைரஸ் சொட்டு மருந்தை செப்.7ம் தேதி காலை 7:00 மணி முதல் கொடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டது. செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் செப்.6ம் தேதி நள்ளிரவில் சொட்டு மருந்தைவழங்க வேண்டாம் என திடீரென உத்தர விடப்பட்டது. இந்நிலையில் ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு இன்று முதல்(செப்.20) வழங்கப்பட உள்ளது. இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.அவதுாறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்


தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது.
2011 முதல் இதுவரை, 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கொள்முதல் சிக்கல் காரணமாக, 2016 - 17ல், வழங்கப்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, 'டெண்டர்' தொடர்பான சிக்கல்கள் தீர்ந்ததால், 'லேப் - டாப்' கொள்முதல் துவங்கி உள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2016 - 17ம் கல்வியாண்டில் தர வேண்டிய மாணவர்களுக்காக, ஐந்து லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்ய, டெண்டர் இறுதியானது. அதில்,'லெனோவா, டெல்' ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவை, விரைவில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, வினியோகம் துவங்கும். மீதமுள்ள, 3.5 லட்சம், 'லேப் - டாப்'கள் சில மாதங்களில் கிடைத்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்


நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரை, மாநில அரசுகளுக்கு நிதியுதவிவழங்கப்படுகிறது. இதில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகங்கள் மேம்பாடு மற்றும்புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும், ௨௫ ஆயிரம் ரூபாய் நிதி தரப்படுகிறது. 
இந்த நிதியில், நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படும். ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாத புத்தகங்களை, தனியாரிடம் வாங்கி கொடுத்ததால், பண விரயம் ஏற்பட்டதுடன், மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி சரியாக கிடைக்கவில்லை.
இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,இந்த ஆண்டு, அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நுழைவுத் தேர்வு பயிற்சி புத்தகங்களை வழங்க,அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

பி.எட்., கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை


பாடம் நடத்தாத, பி.எட்., கல்லுாரிகளில் சேர வேண்டாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், ௬௯௦ பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பி.எட்., சேரும் பலர், பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபடியே படிப்பது வழக்கம். இதை, சில கல்லுாரிகள் தவறாக பயன்படுத்தி, 'வகுப்புக்கே வர வேண்டாம்;
பட்டம் தருகிறோம்' எனக்கூறி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை:
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., சேருவோர், ஆண்டுக்கு தலா, ௨௦௦ நாட்கள் வகுப்புக்கு வர வேண்டும். ஆனால், சில கல்லுாரிகளின் பிரதிநிதிகளும், ஏஜன்ட்களும், 'வகுப்புக்கே வராமல், தேர்வு மட்டும் எழுதினால் போதும்' எனக்கூறி, மாணவர்களை சேர்க்கின்றனர். இதற்காக, கூடுதலாக கட்டணம் பெறுவதாக, பல்கலைக்கு தகவல்கள் வருகின்றன.
பல்கலை விதிகளுக்கு மாறாக, கட்டணம் வசூலிப்பதும், மாணவர்களை சேர்ப்பதும் தண்டனைக்குரிய குற்றம். எனவே, பொய்யான வாக்குறுதியை நம்பி, தனியார் கல்லுாரிகளில் சேர வேண்டாம். அப்படி சேர்ந்து, பட்டம் கிடைக்காவிட்டால், அதற்கு பல்கலை பொறுப்பாகாது. மேலும், மாணவர்கள் வகுப்புக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் நீக்கப்படுவதுடன், அந்த கல்லுாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன.
எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

TN CPS contribution as on 30.06.2017 PFRDA STATU


DIGITAL SR : IFHRMS BOOKLET NEWS

IFHRMS DIGITIZATION BOOKLET பணிப்பதிவேட்டை பார்த்து நிரப்பவும்:
பக்கம்-1 தற்போதைய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்
பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்
பக்கம்-7 துறை தேர்வு விவரம்
பக்கம்-9-8 கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற மேல்நிலை பணி
பக்கம்-10 தலைமைஆசிரியர் மற்றும் உயர் பதவிக்கான பணிவரன்முறை விவரம்
பக்கம்-15-16 பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு விவரம்
பக்கம்-17 தற்காலிக/நிரந்தர பணி துறவு
பக்கம்-18-19 2003 வேலைநிறுத்தம் மூலம் தற்காலிக பணி நீக்க விவரம்
பக்கம்-21 ஒரு துறையிலிருந்து வேறு துறைக்கு மாறுதல் நியமனம்
பக்கம்-25 ஈட்டிய விடுப்பு இன்றைய இருப்பு விவரம்
பக்கம்-26 மகப்பேறு விடுப்பு விவரம்
பக்கம்-27 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் மருத்துவ சான்றின் மருத்துவ விடுப்பு
பக்கம்-28-29பதவி உயர்வு மூலம் ஊதிய மறுநிர்ணயம் மட்டும்
பக்கம்-30-32 ஊதிய குழு நிர்ணயம்
பக்கம்-31-33 இடைக்கால நிவாரணம்
பக்கம்-34 இளையோர் மூத்தோர் ஊதிய விவரம்
பக்கம்-35-44 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-45 ஊக்க ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-46 தேர்வு/ சிறப்பு நிலை ஊதியம்
பக்கம்-47 உயர் கல்விக்கான துறை அனுமதி
பக்கம்-55-58 வாரிசு நியமன விவரம்
பக்கம்-61 பணி சரிபார்ப்பு
விவரம்
ஓ.மு L.Dis 
மூ.மு K.Dis
ப.மு D.Dis
நி.மு R.Dis
செமுஆ Proc
ந.க R.C
அரசாணை G.O
இரு Standing Order No.


FLASH NEWS : JACTTO- GEO 07.09.2017 - 15.09.2017 போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஊதியத்தை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய கருவூல ஆதிகாரி உத்தரவு - செயல்முறைகள்

 

Tuesday, 19 September 2017

அசாம் அரசு அதிரடி : 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை !!


 இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலையோ உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ இனி இல்லை என்ற அதிரடி திட்டத்தை அசாம் அரசு கொண்டுவந்துள்ளது. அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது. எம்.எல்.ஏ.வாக தேர்வு
செய்யப்பட்டவர்கள் இந்த விதியை மீறினால் தகுதி இழப்புக்கு ஆளாவார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் 2 குழந்தைகள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது. 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2 கோடியே 66 லட்சமாக இருந்த அசாமின் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த 17 சதவீத வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாது என்பதால் மக்கள் தொகை கொள்கையை திருத்தி அமைத்துள்ளதாக அசாத் அரசு விளக்கமளித்துள்ளது.

மனைவி் பிரசவத்தின் போது "ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை" - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!


வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 
டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்

PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.

அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது.
தேர்வின் முடிவுகள் அடுத்த 41-வது நாளில் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது.எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதுடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.
1,060 காலியிடங்கள்
இந்த நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 12-ம் தேதி வெளியிட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதற்காக, பணிக்கு தேர்வானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.இதற்கிடையே மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், 2315 பேர் மட்டுமே எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதியானோர் கிடைக்காததால் 1066 இடங்கள் காலியாகவுள்ளன. (எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். 
எஸ்சி வகுப்பினர் 45 சதவீதமும் எஸ்டி பிரிவினர் 40 சதவீதமும் எடுக்க வேண்டும்) வேதியியல், பொருளாதாரம், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதர பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன.
விரைவில் அடுத்த தேர்வா?
பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை நேரில் வழங்குகிறார்.
இந்த நிலையில், தகுதியானோர் கிடைக்காத காரணத்தினால் காலியாகவுள்ள 1065 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு முதுகலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது,"தேர்வு நடத்தி தகுதியானோரை தேர்வுசெய்து பட்டியலை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்குமாறு அத்துறை கேட்கும் பட்சத்தில் தேர்வு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

FLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!!






தமிழக அரசு தனது கடித எண்:-28939/எ2/2017-1 நாள்.05.9.2017 ன் படி தமிழக அரசு ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பணியாற்ற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த ஒரு பணியாளரும் தனித்தனியாக தனது சொந்த செலவில் அடையாள அட்டை எடுக்க தேவையில்லை.  GOMS No.363 P& A R (A) Depat.dt.01.12.2004 ன் படி அடையாள அட்டைகளை முதல் தடவை அரசு செலவில் ". ஏனைய சில்லரை செலவினம் "என்ற தலைப்பில் அலுவலக செலவில்  அரசு விதிகளை கடைப்பிடித்து அட்டையை  அனைவரும் பெறலாம். கடன் பட்டியலை கருவூலம் மூலம் காசாக்கிடலாம். மேலும் இந்த அடையாள அட்டை நீளம் 10 செமீ அகலம் 7 செமீ அளவில் இருக்க வேண்டும்.

Sunday, 17 September 2017

TET 2012, 2013 மற்றும் 2017ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஒருங்கிணைந்த General Mark List விரைவில் வெளியிடப்படும். - TRB



பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு+

பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் . தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஏட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர் .

*ஆசிரியர் படிப்பு*
தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஏட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில்  ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .
அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஏட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் . தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது . இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்களை "நீதிமன்றம் " தங்களின் எல்லையை தாண்டி விமர்சிக்கிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு!!

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை மாற்றம்?

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 21ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் ஏற்பட்டுள்ள  குறைபாடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் வெயிட்டேஜ் முறை மாற்றி அமைக்கப்படும் என்றார்.


B.Ed., கணிணி அறிவியல் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!!



Friday, 15 September 2017

PGTRB APPOINTMENT COUNSELLING ON 19.09.2017

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர்வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.
 முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில்சென்று கலந்து கொள்ள வேண்டும்.முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலகங்களில் நடத்தப்படும்.
முதல்வர் வழங்குவார்:
 கலந்தாய்வில் கலந்துகொண்டு பணிநியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.


ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தெரிவித்தபடி போராட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
துகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் போராட்டத்துக்கு நாங்கள் காரணம் அல்ல, அரசு தான் முழு காரணம். அரசு எங்களை 14 ஆண்டுகாலம் அலைக்கழித்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இறுதியாக, நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள், உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் துணைபுரிகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டத்தை நிறுத்த முடியாது என்று நிர்வாகிகள் கூறினர்.
முதல் வெற்றி
தமிழக அரசின் தலைமைச் செயலாளரை 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக சொல்லி, அவரிடம் உங்களுடைய கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது? என்று கேட்போம். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு எங்களுடைய நிர்வாகிகள், போராட்டத்தை கைவிட முடியாது. 21-ந்தேதி தலைமைச் செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி என்ன சொல்கிறார் என்று தெரியும் வரை கோர்ட்டு மீது வைத்துள்ள நம்பிக்கையின்படி, தற்காலிகமாக எங்களுடைய போராட்டத்தை நிறுத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர். அந்த அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை 21-ந் தேதி வரை ஒத்திவைத்து பணிக்கு செல்கிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.
உயர்மட்டக்குழு கூடுகிறது
இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடுகிறது. அதில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பது குறித்து முடிவு எடுப்போம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.
அவைகளை அந்தந்த துறை வாபஸ் பெறுவது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, 14 September 2017

அரசுப் பள்ளியில் உங்கள் குழந்தைகள் படித்தால் போராடுவீர்களா?... ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

போராட்டத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கு படித்தால் போராட்டத்தில் ஈடுபடுவார்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. 
ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக அரசுக்கு12 கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. இது குறித்து பதிலளிக்கவும நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. பணிக்கு செல்லாத 33,487 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
வேலை நிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும் என்றும், 43,508 ஆசிரியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதகவும் கூறியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் வாதத்தை கேட்ட நீதிபதி கிருபாகரன், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்தால் போராட்டத்தில் ஈடுபடுவீர்களா? என கேள்வி எழுப்பினார். 
அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் எதிரானது அல்ல. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்தை தான் கவனத்தில் கொள்கிறேன். அரசு ஊழியர்கள் பற்றி நான் கேட்கவில்லை. ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக இருந்த போராட்டம், சமூக, மதம் மற்றும் மொழிவாரியாக மாறியுள்ளது என்று கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்

"ஆசிரியர்கள் சம்பளத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்வகையில் நீதி? "- எது நீதி? எது நேர்மை? - ARTICLE

உயர்நீதிமன்றம் ஆசிரியர்கள் சம்பளத்தை, அன்றாடக் கூலியாட்கள் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல், அரசு ஊழியர், எம்.எல்.ஏ., நீதிபதிகள் எல்லோர் சம்பளத்தையும் கூலியாட்கள் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதால் என்ன பயன்?
வேலையின் படிநிலைகளுக்கு ஏற்ப சம்பள வேறுபாடு, மடுவுக்கும் மலைக்கும் உள்ள வேறுபாடாக இருப்பது எல்லா துறையிலும், எல்லா காலத்திலும், எல்லா அரசிலும் இருந்து வருவதுதான். அதை எவரும் மறுக்க முடியாது.
அப்படியிருக்க, இதில் ஆசிரியர்கள் சம்பளத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்வகையில் நீதி?
கூலிக்காரன் உழைக்கும் நேரத்தை நீதிபதி உழைக்கும் நேரத்தோடும், கூலிக்காரன் சம்பளத்தை நீதிபதி சம்பளத்தோடும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
*ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதற்கு இழப்பீடு ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து எப்படிக் கொடுக்க முடியும்?*
*மாணவர்கள் இழப்பது கல்வியை. அதைப் பணத்தால் எப்படி ஈடுகட்ட முடியும்?*
ஆசிரியர்களைக் கொச்சைப்படுத்துவது உணர்வு வயப்பட்டதன் விளைவு.
பணியைச் சரியாகச் செய்யாத ஆசிரியரை கடுமையாகத் தண்டிக்கலாம். மாறாக, ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மனங்களை ஒடிப்பது பாதக விளைவையே தரும்.
அனைத்துக்கும் அடிப்படை ஆசிரியர்கள், அவர்களின் பணிகள் என்பதை எவர் மறந்து செயல்பட்டாலும் அது சரியான அணுகுமுறை ஆகாது!
*மதுவாலும், போதையாலும் மாணவச் சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது அரசுக் கொள்கையால். அதைத் தடுக்க, நீதிமன்றங்கள் ஏன் கடும் நடவடிக்கை அரசு மீது எடுக்கக் கூடாது? மாணவர் நலன் காக்க அது கட்டாயம் அல்லவா?*
சமச்சீர் கல்வியை ஏற்க முடியாது என்று ஜெயலலிதா பிடிவாதம் பிடித்து, நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் புத்தகங்கள் அச்சிட்டு வரும்வரை, மாதக்கணக்கில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதே!
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பாழாக்கப்பட்டனவே. அப்போது நீதிமன்றங்கள் மாணவர்களுக்கு வழங்கிய இழப்பீடு என்ன?
*இரண்டு மாத காலம் அரசுக்கு அவகாசம் அளித்துதான் போராட்டம் நடத்துகிறார்கள். அப்படியிருக்க அரசை விட்டுவிட்டு, போராடுகிறவர்களை மட்டும் கண்டிப்பது நீதியாகுமா?*
நீதிமன்றம், தமிழக அரசுக்கு ஒரு காலக்கெடு கொடுத்து, சங்கங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்; இல்லையென்றால் கோரிக்கைகள் சார்ந்து நீதிமன்றமே ஆணையிடும் என்று நீதிமன்றம் நெருக்கடி கொடுப்பதுதானே நீதியாகும்? நேர்மையாகும்?
நீதிமன்றம் நியாயங்களை நிச்சயம் ஏற்கும்; ஏற்க வேண்டும் என்பதால் இந்த நியாயங்களை வெளியிட வேண்டியது ஒரு குடிமகனின் கட்டாயமாகிறது!

அமைச்சர் செங்கோட்டையன் உடன் - JACTTO-GEO GREAF நிர்வாகிகள் சந்திப்பு

 அக்.1 முதல் ஊதிய மாற்றம் அமல் செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளதாக அறிவிப்பு

ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் அவகாசம் அளிக்க வேண்டும். தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை அவர்கள் பொறுமை காக்க வேண்டும். நவம்பர் மாத இறுதிக்குள் நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்' என்று தெரிவித்தனர். 


Wednesday, 13 September 2017

விரைவில் பள்ளிகளில் BIO - METRIC ATTENDANCE


அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, 'டிஜிட்டல்' விபர பதிவு அமலுக்கு வருகிறது. 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 
ஒழுங்கு நடவடிக்கை :
இவர்களுக்கு, தினசரி வருகைப் பதிவு, செயல் திறன், பணிமூப்பு, கல்வித் தகுதி, நடத்தை போன்றவற்றை கணக்கிட்டு, சலுகைகளும், விருதுகளும் வழங்கபடுகின்றன.இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தாலும், பதிவேட்டில் வந்ததாக குறிப்பிடுவர். 
சில ஆசிரியர்கள், பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது, தங்கள் மீதான புகார், ஒழுங்கு நடவடிக்கை விவகாரங்களை 
மறைத்து விடுகின்றனர். இந்த தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், ஆசிரியர்களின் வருகைப் பதிவு மற்றும் பணி விபரங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஆசிரியர்களின் பணி பதிவேடு, டிஜிட்டல் எஸ்.ஆர்., எனப்படும், கணினி ஆவணமாக மாற்றப்படுகிறது.
மறைக்க முடியாது :
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களின் பணி அனுபவம், முகவரி, வருமான வரி, கல்வித் தகுதி, 'மெமோ' மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விபரங்களை, தனித்தனியாக பதிவு செய்ய உள்ளோம். ஒரு ஆசிரியரின் பெயரை பதிவு செய்தால், அவரை பற்றிய விபரங்களை, பள்ளி அலுவலகம், மாவட்ட அதிகாரி அலுவலகம், இயக்குனரகம் மற்றும் செயலகம் என, அனைத்து இடங்களிலும் தெரிந்து கொள்ளலாம். எந்த ஆசிரியரும், பள்ளிக்கு வராமல் ஏமாற்ற முடியாது; எந்த விபரங்களையும் மறைக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர்களை இடம் மாற்ற முடிவு
மாணவர் சேர்க்கை இல்லாத,ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் செயல் படுகின்றன. 
இவற்றில், 42 அரசு உதவிபெறும் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், ஒன்பது நிறுவனங்கள் 
மூடப்பட்டு உள்ளன. மற்ற நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதால், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேலை இல்லை; அதனால், பல மாதங்களாக, சம்பளம் வழங்கபடவில்லை. இந்நிலையில், ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை இல்லாத போதிலும், அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. 
உதவிபெறும் சிறுபான்மை ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், சும்மா இருக்கும் ஆசிரியர்களை, அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.சிறுபான்மை அந்தஸ்து பெறாத நிறுவன ஆசிரியர்களை, அரசு பள்ளிகள் அல்லது மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


காலாண்டு தேர்வு விடுமுறையில் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், காலாண்டு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் நடக்கிறது. 
தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு லட்சம் பேர் வரை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதனால், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள், வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு எழுத வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 
இதற்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். ஆனால், அரசு பள்ளிகளில், வழக்கமாக நடக்கும் வகுப்புகளும் போராட்டத்தால் முடங்கி உள்ளன. தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எனவே, இதே நிலை தொடர்ந்தால், அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வில் மட்டும் அல்ல; பிளஸ் 2 தேர்விலும் பின்தங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காலாண்டு தேர்வு விடுமுறையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.செப்., 11ல் துவங்கிய காலாண்டு தேர்வு, 22ல் முடிகிறது; 23 - அக்.,1 வரை, விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், அக்., 3ல் பள்ளிகள் திறக்கப்படும். அதுவரை, பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், தினமும் அரை நாள் சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

2 லட்சம் ஆசிரியர்களுக்கு ’மெமோ!’

’ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, ’மெமோ’ கொடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ’ஜாக்டோ - ஜியோ’ சார் பில், செப்., 7 முதல், கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு செல்லவில்லை; அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பணிகள் முடங்கி உள்ளன. பல பள்ளிகளில், காலாண்டு தேர்வை நடத்தவும், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்துள்ளது. 
இதில், மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வரை பணிக்கு வராதது தெரிய வந்துள்ளது. நிலைமை மோசமாகாமல் தடுக்க, போராட்டத்தில் பங்கேற்று உள்ள ஆசிரியர்களுக்கு, தனித்தனியாக விளக்கம் கேட்டு, ’மெமோ’ கொடுக்கும்படி, மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. 
ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராததால், அவர்களின் வீட்டிற்கே, தலைமை ஆசிரியர்கள் வழியாக, ’மெமோ’ அனுப்பப்பட உள்ளது. அதில், ’பணிக்கு வராமலும், விடுமுறைகடிதமும் இல்லாமலும் வேலை நிறுத்தத்திற்கு சென்றதால், தங்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என, விளக்கம் கோரப்படுகிறது. ஆசிரியர்கள் தரும் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.
’நீட்’ குறித்து பேச தடை
’ஜாக்டோ - ஜியோ’ சங்கநிர்வாகிகள், பள்ளி மாணவர்களிடையே, ’நீட்’ தேர்வுக்கு எதிராக, பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, ’நீட் தேர்வு குறித்து விமர்சனம் செய்யவும், இது தொடர்பாக, பள்ளி பிரார்த்தனை கூட்டம் மற்றும் வகுப்புகளில் உரையாற்றவும், ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 


5 மாணவர்களுக்கு மட்டும் NEET மருத்துவ இடம் கிடைத்தது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்'' - சென்னை உயர் நீதிமன்றம்

JACTTO - GEO போராட்டம் - 18 ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு  உத்தரவு 
''ஐந்து மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்'' என்று காட்டமாகக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி தமிழக அரசு வரும் 18-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்துக்குத் தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆசிரியர்கள் என்ன தொழிலாளர்கள் வர்க்கத்தினரா என்று கேள்வி எழுப்பினார்.
'அரசியல் ஆதாயத்துக்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படுகின்றன' என்று கூறிய நீதிபதி, எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர் என்று கேள்வி எழுப்பியதோடு, கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் கல்வி முறையை முன்னேற்றுவதில் உயர் நீதிமன்றம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்றும் தெரிவித்தார்.
'எனக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்' என்று எச்சரித்த நீதிபதி, 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் காட்டமாகக் கூறினார்.
ஆசிரியர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று வினா எழுப்பிய நீதிபதி, போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டால், ஆசிரியர்களே இழப்பீடு தர உத்தரவிட நேரிடும் என்றும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி அரசு வரும் 18-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்

JACTTO - GEO : உயர்நீதிமன்ற கேள்விகளும் - அரசு பள்ளி ஆசிரியர்களின் விளக்கமும்

*அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் தமிழகமெங்கும் கைது....முடங்கி கிடக்கிறது அரசுப்பணிகள்*
👉🏼முதல் கேள்வி : வெறும் 2% இருக்கும் அரசு ஊழியர் 1% ஆசிரியர்களுக்கு மொத்த மாநில வருவாயில் 40% வழங்கப்படுகிறது இது போதாதா ?


பதில் : 3% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 97% சதவீத மக்களுக்கான பணிகளை செய்கின்றனர்... இந்த 3% பணியாளர்கள் செயல்பாடுதன் மொத்த அரசும் , ஆட்சியும்... இவர்கள் இல்லையென்றால் ஏதுமில்லை...

கடுமையான விலைவாசி உயர்வு அதே பழைய ஊதியத்தை பெற இயலுமா ? இன்று ஒரு வெளியில்  சாதாரண பணியாளின் ஒரு நாள் சம்பளம் ரூ450 முதல் ரூ 800 வரை ஆனால் கடைநிலை அரசு ஊழியன் வாங்கும் ஒரு நாள் ஊதியம் ரூ 250 , கல்வித் தகுதிகேற்ப தனியார் தரும் மாத வருமானம்  லட்சங்கள் கூட ஆனால் அரசோ தருவது சில ஆயிரங்கள்...


👉🏼2006ல் அமல்படுத்தப்பட்ட பழைய ஊதியம் 2017 ல் மாற்றியமைக்கப்பட வேண்டுமா? இல்லையா?

👉🏼அப்படியே அள்ளி கொடுத்துவிட்டாலும் அந்த பணத்தை அரசு ஊழியர் ஆசிரியர்கள் மென்று தின்று விடப் போவதில்லை... அவர்கள் வாங்கும் பொருள்கள், செலுத்தும் வரி , கட்டணம் என அந்த பணம் இங்கே தான் முதலீடு செய்யப்படும்..

👉🏼சரி அரசுக்கு 4லட்சம் கோடி கடன், இது யாரால் வந்தது ? 3% ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தாலா ? அரசின்  தவறான தொழில் மேம்பாடு , தொழில் வளர்ச்சி முதலீடு இல்லை ... சரியான தொழில் வளர்ச்சி முதலீடு நிதி மேலாண்மை இருந்தால் இந்நேரம் 3% ஊழியர்களுக்கு தரக்கூடிய ஊதியம் மொத்த வருமானத்தில் 20% குறைவாகத் தானே இருந்திருக்கும்...

போதிய வருமானத்தை பெருக்காதது யார் தவறு ? அதற்காக 97% மக்களுக்காக பணியாற்றும் 3% ஊழியர்கள் கடனோடும் பசியோடும் இருக்க சொல்வீர்களா ?

👉🏼5G வரப்போகுது சார் இன்னும் லேன்ட்லைன் போன்லேயே இருந்தா எப்படி ...
👉🏼1.CPS ரத்து
2.ஊதியக் குழு அமல்
3.20%இடைக்கால நிவாரணம் - உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தி தமிழகமெங்கும் லட்சகணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்...
👉🏼மாவட்ட அளவில் மாலைநேர ஆரப்பாட்டம் , சென்னையில் பேரணி, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் என படிப்படியாக போராட்டம் தீவிரப் படுத்தப்பட்டு தற்போது செப்டம்பர் 7 முதல் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டு *தினமும் கைதாகி வருகின்றனர்... 
👉🏼40 ஆயிரம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் எதற்கு போராட வேண்டும் ? என்ற கேள்வி மக்களிடையே எழக்கூடும்... அனைத்து ஆசிரியர்களும் 40,50 ஆயிரம் வாங்குவதில்லை , அப்படியே வாங்கினாலும் *அது அவர்களின் உயர்கல்வி(M.A/M.SC, B.ED,M.ED, M.PHIL/ PH.D) தகுதிக்கும் மற்றும்  10 ஆண்டு 20ஆண்டு பணி முடித்த பின் வழங்கப்படும் சிறப்பு நிலை தேர்வு நிலை பெற்றதாலே ஆகும்...
*ஆசிரியர் பணியில் சேர்ந்த உடனே 40,50ஆயிரம் வழங்கி விடுவதில்லை... சாதாரணமாக *1முதல் 5வரை கற்பிக்க முதன் முதலில் பணியில் சேரும் ஆசிரியருக்கான ஊதியம் மாதம் ரூ16000/-*இது தான் உண்மை..
*👉🏼இந்த ஊதியம் தள்ளுவண்டியிலபானிபூரி, விற்கும்  தொழிலாளியின் ஊதியத்தை விட குறைவு ... 
👉🏼10ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைப்படும் ஊதிய விகிதம் *2006 க்கு பிறகு தற்போது 2017 ல் விலைவாசி விண்ணைத் தொடுமளவு உயர்ந்துவிட்ட காலத்தில் புதிய ஊதியவிகிதம் கேட்பதில் தவறென்ன ... 
*👉🏼2006 ல் வீட்டு வாடகை , பெட்ரோல், அரசி பருப்பு இதர அத்தியாவசிய பொருட்கள் விலை  எவ்வளவு தற்போது எவ்வளவு ? ஊதியம் உயர்த்தி கேட்க கூடாதா ? 
👉🏼ஆசிரியர்கள் கற்பித்தல் பணி மட்டுமல்ல, *தேர்தல் பணி , மக்கள் தொகை கணக்கெடுப்பு , ஆதார் இணைப்பு பணிகள், சுகாதார பணிகள், வாக்காளர் அட்டை தொடர்பான பணிகள் என பல பணிகளையும் சேர்த்தே செய்கின்றனர்... 
👉🏼கவர்ச்சியான விளம்பரங்கள் , ஆடம்பர வசதிகள் இதனாலே தனியார் பள்ளிகள்  மிளிர்வது போல் தெரிந்தாலும் *கல்வித் தரத்தில் அரசு பள்ளிகளே  முதன்மை பெறுகின்றன... இதனை பொதுதேர்வு முடிவுகள் தெளிவு படுத்தும்.. 
👉🏼இத்தகைய ஆசிரியர் போராட்டங்களை கைது நடவடிக்கைகளை டிவிக்கள் கேலி செய்வதும் , இருட்டடிப்பு செய்வதும் நாட்டின் ஊடகத்துறையின் உண்மை மழுங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது.. 
👉🏼"கத்திமுனையை விட பேனா முனை கூர்மையானது " ஆனால் இன்று ?
👉🏼அரசின் அங்கமாக விளங்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது...