https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: தமிழகத்தில் நாளை முழு வேலை நாள்

Friday, 9 November 2018

தமிழகத்தில் நாளை முழு வேலை நாள்


தீபாவளிக்கான கூடுதல் விடுமுறையை ஈடுகட்ட, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாளை முழு வேலைநாளாகும்.

தீபாவளி பண்டிகை, நவ., 6ல் கொண்டாடப்பட்டது; அன்று, அரசு விடுமுறை. அதேநேரத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ம் தேதி திங்கள் கிழமையும் விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவித்தது.இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நாளை தமிழகம் முழுவதும், முழு வேலை நாளாகும். 

அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள், நாளை முழு நாளும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளும், முழு நாளும் வேலை நாளாக பின்பற்றி, பணிகளை பார்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment