https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: அரசு அலுவலக நடைமுறைகள், பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம்!

Saturday, 14 July 2018

அரசு அலுவலக நடைமுறைகள், பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம்!


இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம், நவம்பர் ஒன்றாம் தேதி முதல்  தொடங்கப்படவுள்ளது. 


அரசுத் துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்த, சிறப்புப் பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவகர், இந்த திட்டம் மூலம், தமிழகத்தில் உள்ள 9 லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியமும், 7 லட்சம் ஓய்வூதியர்களின் ஊதியத்தொகை மற்றும் பணபலன்களும் உடனுக்குடன் கிடைக்கும் என்றார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment