https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: July 2018

Thursday, 19 July 2018

CPS அக்கவுண்ட் சிலிப் 23/07/2018 அன்று வெளியிடப்பட உள்ளது


வருமானவரி தாக்கல் நிதியாண்டு 2017-18 -முக்கிய குறிப்புகள்!







இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?



தமிகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது.

 தற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னை வந்தே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல் உருவாகி, மாணவர்களிடம் இருந்து ஏராளமாக பணம் கறந்து வருகின்றன.இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைசெங்கோட்டையன் அறிமுகம் செய்ய உள்ளார்.இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகும் நிலை இருக்கிறது.

இது குறித்த சென்னையில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.இந்த மையங்களில் திறன் வாய்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிக அளவில் மாவட்ட நூலகங்களுக்கு வாங்கப்படும்.

இந்த பயிற்சி மையங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும். இந்த மையங்களில் கிராமப்புறமாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.

Flash News : "No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER


Saturday, 14 July 2018

அரசு அலுவலக நடைமுறைகள், பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம்!


இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம், நவம்பர் ஒன்றாம் தேதி முதல்  தொடங்கப்படவுள்ளது. 


அரசுத் துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்த, சிறப்புப் பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவகர், இந்த திட்டம் மூலம், தமிழகத்தில் உள்ள 9 லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியமும், 7 லட்சம் ஓய்வூதியர்களின் ஊதியத்தொகை மற்றும் பணபலன்களும் உடனுக்குடன் கிடைக்கும் என்றார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு! தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்



அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது:

2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்டநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ‘திறன் வளர்ப்பு பயிற்சி’ தொடர்பான புதிய பாடத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.
தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தொடர்கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்... என்ன செய்யப்போகிறது அரசு?

மிழக அரசின் விலையில்லா அரிசி, பல மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.

தொடர்கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்... என்ன செய்யப்போகிறது அரசு?
மிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் விலையில்லா அரிசிதான், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. மற்றொருபுறம் இந்த ரேஷன் அரிசியானது இடைத்தரகர்கள், உள்ளூர் அரசியல் பிரபலங்கள் உதவியுடன் மூட்டை, மூட்டையாக வெளிமாவட்டங்களுக்குக் கடத்தப்பட்டு விற்கப்படும் அவலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்திலிருந்து, ரயில்கள் மூலம் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு விலையில்லா அரிசி பயணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மேற்கொள்ளும் ரெய்டின்போது, கைது மற்றும் கடத்தல் பொருள்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. 
அந்த வகையில் கடந்த 10-ம் தேதியன்று, அரிசிக் கடத்தலில் ஈடுபட்டதாக சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிமேகலை, பேசின்பாலத்தைச் சேர்ந்த இந்திரா ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 900 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனர். கைதான மணிமேகலையும், இந்திராவும், ``பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், ஓட்டேரி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகளை வாங்குவோம். பெரம்பூரில் ரயில் பிடித்து ஆந்திராவுக்குப் போய், அங்குள்ள ஏஜென்டுகளிடம் கொடுப்போம். சில நேரங்களில் ரயிலில் ஏற்றி அனுப்புவதோடு, எங்கள் வேலை முடிந்துவிடும்" என்று விசாரணையின்போது தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல் திருவொற்றியூரில் நடத்தப்பட்ட ரெய்டில் 600 கிலோ அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளன. அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஆறு பெண்கள், போலீஸில் பிடிபடாமல் தப்பியுள்ளனர். இப்படி, தமிழக அரசின் விலையில்லா அரிசி, பல மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள், மளிகைக் கடைகளும் குறிப்பிட்ட அளவிலான அரிசியை வாங்கிக் கொள்வது சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ரேஷன் கடை
ரேஷன் அட்டைகளை வைத்திருக்கும் பயனாளிகளான பொதுமக்களோ, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்டப் பொருள்களை வாங்கமுடியாமல் மாதந்தோறும் திணறுகின்றனர். அயனாவரத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற வயதான பெண், ``இப்போது ரேஷன் கார்டு கையில் இல்லை. ஸ்மார்ட் கார்டு கொடுத்துள்ளனர். கார்டில் என் பிள்ளை, மருமகள், பேரன், பேத்திகளுடன் என் பெயரும் இருக்கிறது. `ஸ்மார்ட் கார்டில் பெயர் இருக்கிற குடும்ப உறுப்பினர் யாராவது வந்தால் மட்டுமே பொருள் தருவேன்' என்று, ரேஷன் கடையில் சொல்கிறார்கள். ஆனால், பொருள் வாங்க நான் போனால், `உன் பிள்ளையையோ, மருமகளையோ அனுப்பு' என்கிறார்கள். `பேரனைக் கூட்டி வருகிறேன்' என்று சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  அதேபோல் மாதத்தின் முதல் வாரத்தில் போனால், `பத்து தேதிக்கு மேல் வாங்க' என்பார்கள். ஏதாவது வேலை இருந்து இரண்டு நாள்கள் கழித்து, 12-ம் தேதிக்குச் சென்றால் `எல்லாம் முடிந்து விட்டது. மாதக்கடைசியில் வாங்க பார்க்கலாம்' என்று அனுப்பி விடுவார்கள். மாதக் கடைசியில் போனால், எந்தப் பொருளும் இல்லை' என்பார்கள். இப்படித்தான் ரேஷன் பொருள்களை வாங்க முடியாமல், ஒவ்வொரு முறையும் ஏமாந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

ரேஷன் அரிசி மூட்டைகளின் தயவால் தயாரிக்கப்படும் ரெடிமேட் மாவுப் பொட்டலங்கள் இல்லாத கடைகள் சென்னையில் குறைவு. ஹோட்டல்களும் அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றன. இந்த விற்பனையையும் கடந்து, ரேஷன் அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹாத்திம்பெய்க், ``ரேஷன் கடைகளில் நாம் பொருள் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட பொருள்களை வாங்கி விட்டதாக செல்போனில் மெசேஜ் வருகிறது. நான், கடந்த ஓராண்டாகவே இப்படிப்பட்ட குறுந்தகவல்களை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ரேஷன் கடைக்குப் போய், `எந்தப் பொருளும் இல்லை; எல்லாம் தீர்ந்து விட்டது' என்று மாதாமாதம் ஏமாற்றத்துடன் திரும்பும் பல குடும்பங்களில் என்னுடைய குடும்பமும் ஒன்று. எனக்குத் தெரியாமல், ரேஷன் கடையில் என்னுடைய குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருள்கள் போட்டு விட்டதாகச் சொல்வதுதான் கொடுமை. சில ரேஷன் கடைகளில் இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பேசினால், `முதல்ல இங்கிருந்து கிளம்புய்யா' என்று பக்குவமாக மிரட்டி அனுப்புகின்றனர்" என்றார்.
2016-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு அமைச்சர் காமராஜ், ``நியாயவிலைக் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தில் கடத்தல் சம்பந்தமாக, இதுவரை 913 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார். 
இந்த குண்டாஸ் எண்ணிக்கை இப்போது கூடியிருக்கலாம், குறைந்தும் இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை `குண்டாஸ்' சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவுக்கு, அரிசிக் கடத்தல் நெட்வொர்க் வளர்ந்து நிற்கிறது என்பதோடு, இன்னும் அது தொடர்கிறது என்பதையும், இங்கே கவனிக்க வேண்டும். ரேஷன் பொருள்களைக் கடைகளில் தடையின்றி வாங்குவதில் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். `ஏழைகளின் தேவைகளுக்காகவே ரேஷன் கடைகள் என்பது வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கிறது...' என்ற மக்கள் குரலை, அதிகாரத்தில் உள்ளோர் கவனத்துடன் கேட்க வேண்டும்