இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய
மாநிலங்கள் தான் அதிகளவில் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ளன. பஞ்சாப்
மாநிலத்தில் 4,29,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 6.0 சதவிகிதம்
வேலையின்மை நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 3,28,000 அரசு ஊழியர்கள்
உள்ளனர். அங்கு 4.7 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. உத்தரப் பிரதேச
மாநிலத்தில் 1,800,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 7.4
சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. அதேபோல உத்திரகாண்ட் மாநிலத்தில்
2,00,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 7.0 சதவிகிதம் வேலையின்மை
நிலவுகிறது.
இந்தியாவில்
இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை
உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில அரசைப் போல மத்திய அரசும்
வேலையின்மையைப் போக்குவதில் சரிவையே கண்டு வருகிறது. பாரதிய ஜனதா
பொறுப்பேற்பதற்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாக இருந்தது. ஆட்சிப்
பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment