https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: September 2018

Wednesday, 26 September 2018

அரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிடையாது.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு




எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று மிக முக்கியமான எஸ்சி/எஸ்டி பதவி உயர்வு வழக்கு ஒன்றில் அவர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.


SC/ST reservations in promotion: SC favors the 2006 judgment, Said No to reservation
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது இடஒதுக்கீடு வழங்க கூடாது என்று கடந்த 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதற்கு எதிராக மத்திய அரசும், பல சிறுபான்மையினர் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை நீண்ட நாட்களாக நடந்தது. பல்வேறு காரணிகள் இதில் கருத்தில் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்து. மேலும் அரசு பணியில் இவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் விசாரணை முடிந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏழு நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.


அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

2006ல் வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதான். அரசு வேலைவாய்ப்பில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று தீர்ப்பளிக்கப்ட்டு இருக்கிறது.

ஆதார்கார்டு செல்லும் முழு விவரம்


அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.
அதே சமயம் பான் எண் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும்
மேலும்
வங்கி சேவைக்கு
செல்போன் சேவைக்கு
கல்வி சேவைக்கு
போன்றவற்றிற்க்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.
தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது.
நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.
ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. என்று எச்சரித்துள்ளது.
வங்கி மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கும், செல்போன் சேவைக்கும் ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.
ஆதார் இல்லை எனக் கூறி குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது. என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.

Monday, 17 September 2018

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!›




காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் வருகின்ற 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வருகிற 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அதே போல, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 3 பகுதிகளாக தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வு முறையானது, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என மூன்று பகுதியாக தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.

மேலும், மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

*Flash News* *தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.*