Pages

Sunday, 18 March 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி..

7ஆவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதன் அடிப்படையில் தனது ஊழியர்களின் ஊதியத்தை, விரைவில் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, உயர்த்தப்பட்ட ஊதியம், வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியிட்டு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு உயர்த்தப்பட்டால், மத்திய அரசு கடை நிலை ஊழியர்களின் அடிப்படை ஊதியம், 18 ஆயிரத்திலிருந்து, 21 ஆயிரம் ரூபாயாக உயரும் எனத் தெரிகிறது.
6ஆவது ஊதியக்குழு நிர்ணயம் செய்த அடிப்படை ஊதியத்திற்கான 2 புள்ளி 57 மடங்கு என்ற அளவிலிருந்து, சற்று உயர்த்தி, அதனை 3 மடங்கு என நிர்ணயம் செய்து கணக்கிட்டு, அதன் அடிப்படையில் ஊதிய உயர்வினை பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடைநிலை ஊழியர்களின் அடிப்படை ஊதியமான 18 ஆயிரத்தை 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

No comments:

Post a Comment