Pages

Saturday, 8 July 2017

இன்று வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்!!


செனனை மாவட்டத்தில் இன்று, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பெயர் சேர்க்க
சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள், இம்மாத 1ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இதில், இளம் வாக்காளர்கள், தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியின் ஒரு அம்சமாக இன்று மற்றும் 23ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.இதில், 18 - 21 வயது நிறைந்த இளம் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் விண்ணப்பம் கொடுத்து பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment